வேலூர் மாவட்டம் – நிவர் புயல் செய்தி தொகுப்பு:
வேலூர் மாவட்டம் – நிவர் புயல் செய்தி தொகுப்பு – வேலூர் மாவட்டத்தில் நேற்று (25/09/2020) இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
வியாழக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் வேலூர் மாநகராட்சியில் 60 – 70 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பொன்னை – 160 மிமீ மழை
அம்முண்டி – 116 மிமீ மழை
காட்பாடி – 86 மிமீ மழை
பொன்னை ஆறு
Photo Credits – New Indian Express
நாகநதி – 3,400 கன அடி
கௌந்தியா – 3,320 கன அடி
அகரம் – 4,000 கன அடி
பொன்னை – 7,040 கன அடி
பாலாறு – 17,820 கன அடி
வேலூர் மாவட்டத்தில் புயல் வருமா என்ற கேலி பதிவுகளை பொய்யாகும் விதத்தில் காலை 11 மணி முதல் சூறாவளி காற்று வீச தொடங்கியது. புயல் கரையை கடந்து நிலப்பகுதியை அடைந்ததால் வடதமிழக மாவட்டங்களான ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புயல் வீச தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அசுர காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை மழை வெள்ளம் காரணமாக பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அணைக்கட்டு பகுதியில் பத்து ஏக்கர் வாழைமரங்கள் சாய்ந்தது.
வேலூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டின் மேற்கூரை காற்றில் அடித்துச்சேல்லப்பட்டவை மற்றும் இதர சேதாரங்களை மாவட்ட ஆட்சியர் குழு கணக்கெடுத்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் குழு, மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர அரசு பணியாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேல்விஷாரம் பகுதியில் நெடுஞ்சாலையில் நீர் தேங்கியுள்ளது.
மாநகராட்சியின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. வெல்ல நீர் சாலைகளில் தேங்கியுள்ள.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் செய்திகள் இந்த பதிவிலே update செய்யப்படும்.