வேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்?

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் பிரிப்பு:

வேலூர் மாவட்டம் பிரிப்புகடந்த ஆகஸ்ட் 15, 2019 அன்று வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாகவும், இராணிப்பேட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தனர்.

தற்போதைய வேலூர் மாவட்டம்:

தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்:

திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
வாணியம்பாடி
ஆம்பூர்
குடியாத்தம்
பேர்ணாம்பட்
வேலூர் (மாநகராட்சி)
மேல்விஷாரம்
ஆற்காடு
வாலாஜா
அரக்கோணம்

புதிய மாவட்டங்கள்

(தாலுக்கா வாரியாக)

திருப்பத்தூர் மாவட்டம்
1.திருப்பத்தூர்
2.நாட்றம்பள்ளி
3.வாணியம்பாடி
4.ஆம்பூர்

வேலூர் மாவட்டம்
1.பேர்ணாம்பாட்டு
2.குடியாத்தம்
3.காட்பாடி
4.வேலூர்
5.அணைக்கட்டு

ராணிப்பேட்டை மாவட்டம்
1.ஆற்காடு
2.வாலாஜா
3.நெமிலி
4.அரக்கோணம்

வஞ்சிக்கப்படுகிறதா வேலூர்?

வேலூர் மாநகராட்சி எல்லையிலிருந்து அருகில் புதிதாக அறிவிக்கப்படும் மாவட்ட எல்லையை கணக்கில் கொள்ளும்போது, ஒரு மாநகர பகுதியை மாவட்டமாக அறிவிக்கபோறார்களா?

1.வடக்கு மாநகராட்சி பகுதியான கிறிஸ்டியான்பெட் to ஆந்திரம் எல்லை 15km

2.தெற்கு மாநகர் வேலூர் மருத்துவ கல்லுரி to நெல்வயல் 2km (ராணிப்பேட்டை மாவட்டம்)

3.கிழக்கு மாநகராட்சி பகுதி அலமேலுமங்காபுரம் to ரத்தனகிரி 2.5km (ராணிப்பேட்டை மாவட்டம்)

4.மேற்கு வேலூர் விமான நிலையம் to மாதனுர் 30km (திருப்பத்தூர் மாவட்டம்)

Administrationஐ காரணம் காட்டி பல காலமாக திருப்பத்தூர் மக்கள் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வந்தனர். அதனால் திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவித்தது அவர்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஆனால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் மக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததில்லை. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி மக்கள் வேலூர் மாவட்டத்தை விட்டு பிரிய வேண்டும் என்று விருப்பட்டதில்லை.

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் மக்களே மாவட்டத்தை விட்டு பிரிய கோரிக்கை விடுக்காத பொது, ராணிப்பேட்டை மாவட்டமாக அறிவித்தது எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியாகவே உள்ளது. வேலூர் மாநகராட்சி எல்லையில் இருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரமே உள்ள ராணிப்பேட்டை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஒரு மாநகராட்சி எல்லையையே மாவட்டமாக பிரிக்கப்பட்டது வேலூர் மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் ?

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் திருப்பத்தூர் மக்களுக்கு இது சாதகமே.

ஒன்பது நகராட்சிகளை கொண்டு செயல்பட்ட வேலூர் மாவட்டம் இப்பொழுது மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிய வேலூர் மாவட்டத்தில் வெறும் மூன்று நகராட்சிகளை கொண்டுள்ளது வேலூர் மாவட்டத்துக்கு பாதகமே. அதுமட்டுமின்றி இப்பொழுது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் வேலூரின் GDP பங்களிப்பு மிகவும் பெரியது.  சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கோவை வரிசையில் வேலூர் மாவட்டம் டாப் ஐந்து GDP பங்களிக்கும் மாவட்டமாக இருந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள், ராணிப்பேட்டை BHEL , வேலூர் CMC, VIT போன்ற நிறுவனங்களின் பெரும் பங்களிப்பே நமது மாவட்டத்தின் GDP வளர்ச்சிக்கு அடித்தளமாய் இருந்துள்ளது.

தோல் தொழிற்சாலைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் சேரும் பட்சத்தில், BHEL தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரிந்து போகும் பட்சத்தில், மூன்று மாவட்டங்களின் GDP பங்களிப்பு குறையும். இதனால் முதல் 5 இடத்தில இருந்த நம் மாவட்டம் பெரும் சரிவை சந்திக்கும். புதிதாக கட்டப்பட்டு வரும் CMC மருத்துவமனையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேரும். ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் GDP ஒரு முக்கிய அம்சம். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் குறையும்.

உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்:

வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது சம்மந்தமான உங்களது உங்களது கோரிக்கைகளை கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

வேலூரை சார்ந்த சமூக ஆர்வலரான பரந்தாமன் அவர்கள் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். சமூக ஆர்வலரான சுமூகன் அதை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறப்பட்டிருப்பவை யாதெனில்,

வேலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதி மக்களுக்கு பயன்தரும் அருமையான முடிவை எடுத்துள்ள தமிழக அரசைப் பாராட்டி நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த முடிவின் மூலம் வேலூர் மாவட்டத்தின் தொலைவில் உள்ள திருப்பத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நிர்வாக ரீதியில் அரசுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களுக்கும் நல்ல பயனைத்தரும். அரசின் இந்த முடிவில் அதிக பயன் நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் தரக்கூடிய ஒரு சில மாற்றங்களை உங்கள் பரிசீலனைக்கு முன் வைக்கின்றோம்.

கருத்து – வேலூர் மாவட்ட கிழக்கு எல்லையை வாலாஜா அல்லது காவேரிப்பாக்கம் வரை விரிவுபடுத்த வேண்டுகின்றோம்.

காரணம் – வேலூர் மாநகரின் கிழக்கு திசையில் காவேரிப்பாக்கம் வரையிலும் உள்ள எல்லாப் பகுதிகளும் வேலூர் மாநகரின் புறநகர்ப்பகுதிகளாகவே அமைந்துள்ளன. தினசரி பேருந்து மூலமோ அல்லது இருசக்கர வாகனம் மூலமாகவோ இந்தப்பகுதிகளில் இருந்து வேலூர் நகருக்கு சுலபமாக வந்து செல்ல இயலும். இது அடிப்படையில் அதிகமான போக்குவரத்து வசதி கொண்ட வழித்தடமாகும். இது பொது மக்களுக்கு மிக மிக பயனைத்தரும் ஒரு மாற்றமாக அமையும். இப்பகுதிகளை இராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைத்து செய்யப்படும் மாற்றம் பெரிய அளவில் எந்த வேறுபாட்டையும் கொண்டுவராது. ஆனால் வாணியம்பாடியில் உள்ளவர்களுக்கு வேலூர் வருவதைக்காட்டிலும் திருப்பத்தூர் செல்வதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்து – புதிய மாவட்டத்தின் சுருக்கப்பட்ட எல்லைகள், ஒரு மாவட்ட அளவில் இல்லை.

காரணம்வேலூர் மாவட்டத்தின் புதிய எல்லைகள் கிட்டத்தட்ட சென்னையைப் போல அமைந்துள்ளன. சென்னையில் ஒரு மாநகரமே மாவட்டமாக அமைந்துள்ளது. மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள சென்னைக்கு இது சரியாகப் பொருந்தும். ஆனால் வேலூர் ஐந்து இலட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம். இதை சிறிதளவு விரிவுபடுத்தி மாவட்டமாக ஆக்கினால் பெரிய அளவில் எவ்விதப் பயனும் ஏற்பட்டுவிடாது. சாலைமார்க்கமாக பார்க்கும்போது வடக்கில் ஆந்திர எல்லை வரையிலும், மேற்கில் ஆம்பூர் வரையிலும், தெற்கே திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரையிலும், கிழக்கே காவேரிப்பாக்கம் வரையிலும் ஒரு மாவட்டத்தை உருவாக்குவதே அர்த்தமுள்ளதாக அமையும்.

கருத்து – அரக்கோணம் மாவட்டம் ஏன் தேவை?

காரணம் – அரக்கோணம் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டால், திருத்தணி, பள்ளிப்பட்டு அரக்கோணம் வட்டங்களை அதில் இணைக்கலாம். வாலாஜாவின் ஒரு பகுதியைத்பிரித்து புதிய வட்டம் ஒன்றை உருவாக்கி அரக்கோணம் மாவட்டத்துடன் இணைக்கலாம்.சிறிய அளவில் இருந்தாலும் உருவாக்கப்பட உள்ள வேலூர் மாவட்டத்தை விட இது பெரியதாக இருக்கும். இந்தப்பகுதிகள் வேலூரை விடவும், இராணிப்பேட்டை அரக்கோணத்துடன் சுலபமான இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. அருகில் உள்ள கிராம மக்கள் அரக்கோணத்தை சுலபமாக அடைய முடியும்.

கருத்து கேட்ப்பு கூட்டம்:

புதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் K.சத்தியகோபால் இ.ஆ.ப தலைமையில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்படி 29.08.2019 காலை 11.30 மணி முதல் 01.30 மணிவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கல்லூரி கலைரங்கில் வேலூர் மாவட்டம் தொடர்பாகவும்.

29.08.2019 மதியம் 03.30 மணி முதல் 6.30 மணிவரை வாணியம்பாடி சின்னக்கல்லுபள்ளியில் உள்ள மருதகேசரி ஜெயின் பெண்கள் கல்லூரி கலையரங்கில் திருப்பத்தூர் மாவட்டத்திர்க்கும்.

30.08.2019 அன்று காலை 09.30 மணி முதல் 01.00 மணிவரை மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹகீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெறும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிப்பு.

விதிமுறைகள்:
கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க விரும்புவோர் 2- மணி நேரத்திர்க்கு முன்பாக கூட்ட அரங்கிர்க்கு வந்து முன் கூட்டிய வளாகத்திர்க்கு வெளியில் பதிவு செய்திருக்க வேண்டும் பதிவு செய்த மனுக்கள்மட்டும் பெறப்படும்.

கூட்டத்தில் பேச விரும்புவோர் முன்கூட்டிய வளாகத்திர்க்கு வெளயே தங்களது பெயர், இருப்பிடம் போன்ற முகவரியை பதிவு செய்ய வேண்டும் அவர்களுக்கு பிரத்யோக டோக்கன் வழங்கப்படும் டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே பேச முடியும்.

வாய்மொழியாக அளிக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்க்கப்படமாட்டது. எழுத்து மூலமாக அளிக்கப்படும் கோரிக்கையே ஏற்க்கபடும்.

வேலூர் மாவட்டத்தில் எந்த பகுதியை சார்ந்தவராக இருந்தாரும் எந்த கூட்டத்தில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

Written by 

A Proud Tamizhan. Native Resident of Vellore. VIT Alumni. Founder of Namma Vellore. Entrepreneurial Enthusiast. Startup Guy. Coffee Addict. Positive Vibe Spreading Soul. Connect with me at support@nammavellore.in

Leave a Reply