வேலூர் மால் – Velocity விரைவில் தொடக்கம்

vellore mall

வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity விரைவில் தொடங்க உள்ளது. அதன் கட்டுமான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புதிய வணிக வளாகம் (மால்) கட்டுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது. வேலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே புதிய வணிக வளாகம் கட்டப்படும் என பலர் எதிர் பார்த்தனர். வணிக வளாகத்திற்கான வரைபடங்கள் மற்றும் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் அலைக்கழிக்க பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், PVR திரையரங்கம் கொண்ட கட்டிடத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டது. அந்த கட்டிடம் இப்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

வேலூர் மால்:

நாற்பத்தி ஏழாயிரம் சதுரடியில் உருவாகும் அந்த வணிக வளாகமே Velocity மால்.
வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் வேலூரின் புகழ்பெற்ற ‘ஹண்ட்ரேட்ஸ் ஹெரிடேஜ்’ (Hundreds Heritage) உணவகம் இடம் பெற உள்ளது. முதல் தளத்தில் PVR திரையரங்கம் இடம் பெற உள்ளது. நான்கு திரைகள் கொண்ட திரையரங்கமாக முதல் தளத்தில் PVR திரையரங்கம் செயல் படும்.

இதை பற்றிய அதிகார பூர்வமான தகவல்களை Hundreds Heritage நிறுவனம் மற்றும் PVR Cinemas வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட கட்டுமான பணிகளை அடைந்துள்ள இந்த வணிக வளாகம் விரைவில் திறக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதன் ஆங்கில செய்தி இங்கே

Update:

வேலூர் மால் – Velocity 07/06/2018 அன்று தொடங்கப்பட்டது. அதன் செய்தி இங்கே

Leave a Reply