வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா 2018

gangaiyamman

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா,  வேலூர் மாநகராட்சியில் ஒரு முக்கியமான திருவிழாவாக கடந்த பல ஆண்டுகாலமாக வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது.

திருவிழாக்களை தொலைத்த தலைமுறை மத்தியில், பல ஆண்டுகாலமாக அரங்கேறி வரும் பிரசித்தி பெற்ற வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நாளை (30/05/2018) நடைபெற உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா:

இன்று இரவு(29/05/2018) புஷ்ப பல்லக்கு, அம்மன் தேரோட்டத்துடன் துவங்கும் இத்திருவிழா நாளை காலை அம்மன் சிரசு ஏற்றத்துடன் களைக்கட்டும்.

நாளை (30/05/2018) காலை முதல் மாலை வரை வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலம்பாட்டம், புலி ஆட்டம், மற்றும் கிராமிய கலைகளுடன் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பாரம்பரிய திருவிழாவாக இது அமைந்து வருகிறது.

ஸ்ரீ கெங்கையம்மன் இன்னிசை விழாக்குழுவினரின் நிகழ்ச்சி நிரல்:

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5000க்கும் மேற்பட்டோர்க்கு தலை வாழையிலையில்  அன்னதானம் வழங்கப்படும்.

இடம் : செங்குந்தர் சமுதாயக் கூடம், சத்துவாச்சாரி.

காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை கோவில் அருகே நீர், மோர் வழங்கப்படும்.

சத்துவாச்சாரி RTO சாலையில் மாலை 6 மணிக்கு கோவை ராஜீவ் வழங்கும்

‘சாக்ஸோபோன் தனி இசை ஆவர்த்தனம்’ நடைப்பெற உள்ளது.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி திரை இசைப் புகழ் ஒளிவியர் வழங்கும்

‘ஒளிவியர் ரிதம்ஸ்’ இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.

அனைவரும் வாரீர்!

விழா அமைப்பாளர்: MJF.Lion.T.சண்முக சுந்தரம் Ex M.C மற்றும் இன்னிசை விழா குழுவினர்.

Digital Partner : www.nammavellore.in

Media Partner : Jay TV

Leave a Reply